Saturday 5 November 2011

சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரியில் மரம் நடு விழா


2011 ம் ஆண்டு சர்வதேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.


மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது.



இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம்.



"இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை" என்று ஓர் ஆய்வு கூறுகிறது.


எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக "சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி யில் மரம் நடு விழா"  இன்று (05-11-2011) இனிதே நடைபெற்றது  .
கல்லூரித் தலைவர் முதல் மரக் கன்றை நட்டு விழாவினைத் துவக்கி வைத்தார்.



கல்லூரி முதல்வர், கல்லூரி நிர்வாக அலுவலர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


கல்லூரி வளாகம் முழுவதும் பசுமை புரட்சி கண்டது. இது போல ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்கூடங்களும் இந்த மழை காலத்தில் மரங்களை நடுவதன் மூலமாக ஒட்டு மொத்த இந்தியா வையும் பசுமை பெற செய்திட முடியும்.

விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த  விழாவில் மொத்தம் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன. 



மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

No comments:

Post a Comment