Wednesday 30 November 2011

மாறுமா ?? இன்றைய கல்விமுறை !

தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைப் போல, தேர்விலும் பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவது இன்றைய உயர்கல்வி உலகில் மிக இயல்பான செயலாக மாறிவிட்டது.  

அண்மையில் பொறியியல் கல்லூரியில் பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனது தம்பிக்கு மதிப்பெண் போட்டுக்கொடுத்து தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஓர் உதவிப் பேராசிரியருக்கு கையூட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அந்த கல்லூரி ஆசிரியர் ஏமாற்றிவிட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  

இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இது குறித்து பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். 

தங்கள் பல்கலைக்கழகத்தில் இத்தகைய முறைகேடுகள் இல்லை என்றும் விடை திருத்தும் பணி முறைகேடுக்கு இடமளிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமேடைகளில் இதுபற்றிப் பேசுவதும், மாணவர்கள் இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்று அறிவுரை வழங்குவதும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி பத்திரிகைகளில் தென்படும் செய்தியாக இருக்கிறது.  

துணைவேந்தர்கள் இவ்வாறாகக் கூறினாலும், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சங்கத்தினர் சொல்லும் கருத்து நேர்மாறாக இருக்கிறது. இவ்வாறு பணம் கொடுத்து தேர்ச்சி மதிப்பெண் பெறுவது பல இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.  

கால் நூற்றாண்டுக்கு முன்பே இத்தகைய "பேப்பர் சேஸிங்' (விடைத்தாளைத் துரத்துதல்) பற்றிய பேச்சு இருக்கவே செய்தது. சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்கள் எந்தப் பேராசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்துத் தகவல் பெறுவதும், அதன் பின்னர் தங்களுக்கான டம்மி எண்களைப் பெற லஞ்சம் கொடுப்பதும், விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் வீட்டுக்கே போய், வாசலில் அழுது, கெஞ்சி அல்லது சேவகம் செய்து, எதற்கும் மனம் இரங்கவில்லை என்றால் பணத்தாசை காட்டி அந்தப் பேராசிரியரின் கருணையை எப்படியாவது பெற்று, பாஸ் மார்க் வாங்கி வருவது ஒரு கலையாகவே இருந்தது.

அந்த அனுபவத்தை கொஞ்சம் இட்டுக்கட்டி கண் காது வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லும் தலைமுறையும் இருக்கவே செய்தது.  இப்போது அத்தகைய அனுபவங்களுக்கு அவசியமே இல்லை. 

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உதவிப் பேராசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும்கூட இருக்கிறார்கள். 

இன்றைய உயர் கல்வி உலகில் இத்தகைய முறைகேடுகள் பொறியியல் படிப்பில் மேலதிகமாக நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.  பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவோ, கண்காணிக்கவோ முறையான அமைப்புகள் இல்லை. அத்தகைய அமைப்புகள் இருந்தாலும் அவை வீணான ஒன்றாக ஒப்புக்கு இருக்கிறதே தவிர, அதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

 அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பிற்கு மிக அத்தியாவசியமான உயர் கணிதத்தில் புலிகள் அல்ல. மேனிலைப் பள்ளியில் படிக்கும் முறை, பாடத்திட்டம் அனைத்துமே பொறியியல் கல்லூரிகளில் மாறிவிடுகிறது. 

 உண்மையாகவே உயர் கணிதத்தில் புரிதல் இருக்கும் மாணவர்களால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்களின் வறட்டு கௌரவத்துக்காகவும், ஏதோ பொறியியல் படிக்காவிட்டால் வருங்காலமே சூன்யமாகிவிடும் என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தினாலும் கணிதத்தில் பலவீனமாக இருந்தாலும் நன்கொடை கொடுத்தாவது பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் பலர். ஆகவேதான், பொறியியல் மாணவர்கள் பலருக்கும் அரியர்ஸ் அதிகமாக இருக்கிறது.  

பல லட்சம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாகவும்கூடாது. அதே நேரத்தில் தேர்ச்சி பெற்றுவிடவும் வேண்டும் என்கின்ற கட்டாயம் அந்த மாணவர்களை எப்படியாகிலும், எந்தப் பொய்யைச் சொல்லியாவது பெற்றோரிடம் பணம் பெற்று அதைக்கொண்டு முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது.  

அப்படியே மாணவர்கள் யோக்கியர்களாக இருந்தாலும் அவர்களது பெற்றோரும் அண்ணன் அக்கா போன்ற ரத்தஉறவுகளுமே இந்த முறைகேட்டில் இறங்கிவிடுகிறார்கள்

படிப்புக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டதால் இன்னும் கொஞ்சம் செலவழித்து ஒரு பட்டம் வாங்கிவிட்டால் போதும், பிறகு இதேபோல பணத்தைக் கொடுத்து ஒரு வேலையும் வாங்கிவிடலாம் என்கின்ற "நம்பிக்கைவாதி'களாக இருக்கிறார்கள். 

இந்த இரண்டுக்கும் வழியில்லாமல், இதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியில்லாத மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் பார்க்கிறோம்.  மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதை அவர்களிடம் விட்டுவிடும் நிலைமை உருவானால், இத்தகைய முறைகேடுகளில் 90 விழுக்காடு தானே மறைந்துபோகும்.  ஒரு மாணவர் தனக்குப் பிடித்தமான பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்கும்போது இத்தகைய பேப்பர் சேஸிங் என்கின்ற வேலைக்கே இடமில்லை. 

கல்லூரிக்கு மட்டம் போட்டு ஊர்சுற்றுவதும்கூட பிடிக்காத படிப்பினால்தான்.  கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை வெறும் 'அரியர்ஸ் கிளியர்' ஆகிவிட்டாலே போதும். ஆனால், பள்ளி மாணவர்கள் பெற்றோருக்காக மதிப்பெண் வாங்கிடப் படும்பாடு மிக மிக அதிகம்.  

மாணவர்கள் விரும்பும் கல்வி என்பதை நாம் உருவாக்கவில்லை. நாம் உருவாக்கிய கல்வியை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. கல்வித்துறைத் திணிப்பு ஒருபுறம், பெற்றோரின் திணிப்பு மறுபுறம். இந்த நிலை மாறினால் மட்டுமே, கல்வித்துறையில் ஊழல்கள் களையப்படுவது மட்டுமன்றி கல்வி தரமானதாகவும், பயனுடையதாகவும் மாறப்போகிறது. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது.  
                                                                             - நன்றி  தினமணி

Tuesday 15 November 2011

அரசு பள்ளிகளில் இளம் 'அப்துல் கலாம்'கள்

பழனி  கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 


கண்காட்சியை சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி நடத்தியது. விழாவில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


உண்மையில்அரசு பள்ளி மாணவர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக பல்வேறு மாணவர்கள் கலந்துகொண்டு 'அறிவியல் கண்காட்சி' ல் சாதித்து காட்டினர். 


கூடங்குலம் முதல் சுனாமி வரை ... பீரங்கி முதல் ரோபோ வரை... விவசாயம் முதல் விண்வெளி வரை... இன்றைய அறிவியலுக்கு இணையாக தங்களது திட்டங்களை விளக்கி இருந்தனர்.


கண்காட்சியில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சில...
Administrative officer with function organizer


College Chairman watching the exhibits


Students Explaining the Exhibits


Chairman giving Prizes for the Students


Home alert system


Painless Cycle


Tsunami Alert System


Safety Road Alert system in Hill Stations




Ozone  Layer effects




Agri Methods




Wind Energy
Navy
Dying Factory
Nature Fridge
Air Force
Measuring The loaded vehicle in bridges


Students With ROBO
அறிவியல் புரட்சியாளர்கள் அரசு பள்ளி மாணவர்களாகவே இருக்க அடிப்படை தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை. அப்துல் கலாம்,
மயில் சாமி அண்ணாதுரை போன்றவர்கள் அனைவரும் இந்த ரிசையில் வந்தவர்களே. 


திறமையுள்ள இது போன்ற மாணவர்களை ஊக்ப்படுத்துவதன் மூலம் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Wednesday 9 November 2011

India's quality of education still poor : World Bank

Though India has some good institutions like IITs and IIMs, they are not as tall as institutions like MIT and Leeds in terms of quality of education provided.

It's not enough that you are putting more children into schools and colleges each year, you will have to bring them at par with international standard.



India has the resources to formulate an efficient education policy, inequality in distribution of resources remains a cause of concern.

India is a country which experiments a lot but these experiments have to yield fruits, there are still schools and colleges functioning without any infrastructure."



World Bank has been supporting basic education in the country to augment the Right to Education (RTE).

World Bank


Our contribution is to bring knowledge and experience to help design education policy. In terms of monetary help, but World bank may contribute full of  bucket but we can get a drop.

"Jai India" The father country of corrupti(o)n(g).....

                                          




Saturday 5 November 2011

சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரியில் மரம் நடு விழா


2011 ம் ஆண்டு சர்வதேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.


மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது.



இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம்.



"இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை" என்று ஓர் ஆய்வு கூறுகிறது.


எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக "சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி யில் மரம் நடு விழா"  இன்று (05-11-2011) இனிதே நடைபெற்றது  .
கல்லூரித் தலைவர் முதல் மரக் கன்றை நட்டு விழாவினைத் துவக்கி வைத்தார்.



கல்லூரி முதல்வர், கல்லூரி நிர்வாக அலுவலர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


கல்லூரி வளாகம் முழுவதும் பசுமை புரட்சி கண்டது. இது போல ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்கூடங்களும் இந்த மழை காலத்தில் மரங்களை நடுவதன் மூலமாக ஒட்டு மொத்த இந்தியா வையும் பசுமை பெற செய்திட முடியும்.

விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த  விழாவில் மொத்தம் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன. 



மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

Thursday 3 November 2011

உலக மக்கள்தொகை 700 கோடி!

உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுவிட்டது. 700 கோடியைத் தொட்ட பெண் குழந்தை, இந்தியாவில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள புறநகர்ப் பகுதியில் வாழும் ஒரு ஏழைத் தம்பதிக்குப் பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். 


 
உலக மக்கள்தொகையில் 20 விழுக்காடு சீன நாட்டுக்கு உரியது. 18 விழுக்காடு இந்தியாவுக்கு! அமெரிக்காவின் பங்கு வெறும் 5 விழுக்காடு மக்கள்தொகைதான். உலக நிலப்பரப்பில் 2.4 விழுக்காடு கொண்டிருக்கும் இந்திய நாட்டில் 100 கோடி மக்கள்தொகையா என்று வியப்பெய்தும் அதே நேரத்தில், 2025-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 150 கோடியை எட்டும் என்கிறது புள்ளிவிவரம். 

இந்தியாவில் முன்பு "நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற திட்டமும், தற்போது "வீட்டுக்கு ஒரு மரம், வீட்டுக்கு ஒரு குழந்தை' என்ற திட்டமும் நடைமுறையில் இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் அத்தனை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆகையால்தான், இன்னும் பதிமூன்று ஆண்டுகளில் கூடுதலாக 50 கோடி மக்களை இந்தியா பெறக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. 

ஆனால், சீனா அப்படியல்ல. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என்பது அரசின் விதி. இதற்கு அதிகமாகப் பிள்ளை பெற்றால் அக்குழந்தைக்கு அரசின் சலுகைகள் - பள்ளி முதல் வேலைவாய்ப்பு வரை- கிடைக்காது. ஆகவே, அங்கே யாரும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை சீனா திறமையாகக் கட்டுப்படுத்திவிட்டது 

 அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கும் வளத்துக்கும் குறைந்த மக்கள்தொகையே காரணம் என்ற கருத்தாக்கம் உலகம் முழுவதும் பரவலாகியது. மேலை நாட்டின் கருத்தென்றால் தலைவணங்கி ஏற்கும் மூன்றாம் உலக நாடுகள், தங்கள் மக்கள்தொகையைக் குறைக்கும் வழிதேடின.


இந்தியாவின் நிலப்பரப்பையும் அதில் வாழும் மனிதர் எண்ணிக்கையும் எண்ணிப்பார்த்து, நமக்கு உணவு கிடைக்காமல் போய்விடும், உறைவிடம் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப்போடுவது சரியான கணிப்பாக இருக்க முடியாது.

இங்கு நதிகளைச் சாயக்கழிவுகளால் மாசுபடுத்தி, குடிநீரைக் கெடுத்து விவசாயத்தைப் பாழடித்து கோடிகோடியாய் அன்னியச் செலாவணி ஈட்டியதால் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், நிர்வாகத்தில் கோலோச்சும் அதிகாரிகளுக்கும் வீண்செலவுக்கும் ஊழலுக்கும் பணம் கிடைக்கிறதே தவிர, அது எந்தவிதத்திலும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கிறது. பொறுப்பான, திறமைசாலிகளான குடிமக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, தேசத்துக்குப் பாரமாக, சமுதாயத்துக்குப் பயனில்லாத குடிமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் நமது மக்கள்தொகைக் குறைப்புத் திட்டம் பயன்பட்டிருக்கிறது.

கல்வி என்பது கொள்ளையாக இல்லாமல் சேவையாக இருந்தால், அரசுப் பள்ளிகள் தரமாக இருக்குமேயானால், படித்தவர்களும், வசதி படைத்தவர்களும் ஐந்தாறு குழந்தைகளைப் பெற்று நாட்டுக்கு நல்ல குடிமக்களைத் தர முடியும். முன்பு தந்து கொண்டிருந்தார்கள். இப்போது நடப்பது என்னவென்றால், படித்தவர்களும், வசதி படைத்தவர்களும் ஒன்றிரண்டு குழந்தைகளை மட்டுமே ஈன்றெடுத்து, அவர்களுக்கு நல்ல கல்வியும், நல்ல வாழ்க்கையும் அமைத்துத் தருகிறோம் என்று நன்றாகப் படிக்க வைத்து, முடியுமானால் வெளிநாடுகளுக்கும் அனுப்பி விடுகிறார்கள்.

இன்னொருபுறம், தனக்கும் தனது மனைவிக்குமான அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வழியில்லாதவர்கள் ஆறும் ஏழும் குழந்தைகளைப் பெற்று, அதில் சிலரை சமூக விரோதிகளாக உலவ விடுகிறார்கள். 

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல் இருப்பதும், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்காமல் இருப்பதும், வேலைவாய்ப்புக்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாமல் இருப்பதும்தான் காரணம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

உணவு இயற்கை கொடுக்கும். உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்கிறான் பாரதி.அந்த மாசற்ற அன்பை மட்டும் இந்த 700 கோடியாவது மலருக்கு நாம் அளிக்க முடியும்.  நர்கீஸ் க்கு  நல்வாழ்த்துகள்!