Wednesday, 28 September 2011

கனவு இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் சச்சின் டெண்டுல்கர்

தனது சொந்த வீட்டில் வாழவேண்டும் என்ற கனவை சச்சின் டெண்டுல்கர் பூர்த்திசெய்தார். மும்பை புறநகர்ப்பகுதியான பாந்த்ராவில் பெரி கிராஸ் சாலையில் உள்ள தன் புதிய பங்களாவுக்குக் சச்சின் குடிபெயர்ந்தார்.


பந்ரா மேற்கில் உள்ள லா மேர் கவுசிங் சொசைட்டி கட்டிடத்திலிருந்து இந்த புதிய 6,000 சதுர அடி பங்களாவுக்கு அவர் குடிபெயர்ந்து தனது கனவு இல்லத்தில் வாழ்வைத் தொடங்கினார்.

"சொந்த வீடு என்பது அனைவருக்கும் உள்ள கனவு, எனக்கும் அந்தக் கனவு உண்டு. இந்த ஆசையை பூர்த்தி செய்துவிட்டேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கனவே இருந்த இடம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்தது, நான் அதனை இப்போது காலி செய்துவிட்டதால் வேறு விளையாட்டு வீரர் இதில் குடியமரலாம்." என்றார் சச்சின்.


நான் இங்கிலாந்து செல்லும் முன் கிரஹ சாந்தி, மற்றும் வாஸ்து பூஜா ஆகியவற்றை ஜூன் 11ஆம் தேதி செய்தோம். இன்று எனது தாயாரை அழைத்து வந்து இந்த வீட்டைக் காண்பித்தேன். பூஜைக்குப் பிறகு நான் இங்கு இருந்தேன், ஆனால் குழந்தைகளை நான் அழைத்து வரவில்லை. என்றார் மாஸ்ட்ரோ.

ஏற்கனவே இங்கு ஒரு பழைய பங்களா இருந்தது இதனை சச்சின் டெண்டுல்கர் ரூ.39 கோடிக்கு 2007ஆம் ஆண்டு வாங்கினார். உயரமான மதில்சுவர்களுடன் வீட்டினுள்ளும் வெளியிலும் சி.சி.டிவி கேமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Garden

Kitchen

TV Room

Bed Room

Hall


இது மூன்றுமாடிக் கட்டிடமாகும். இதுதவிர இரண்டு அண்டர் கிரவுண்ட் பேஸ்மென்ட்களும் உள்ளதாகத் தகவல்.

இந்த வீட்டில் நிறைய கார்களை நிறுத்தும் மிகப்பெரிய பார்க்கிங் லாட்டும் உள்ளது. மேல்மாடியில் நீச்சல் குளமும் உள்ளதாம்.



No comments:

Post a Comment