Saturday, 24 September 2011

இந்த வார நகைச்சுவை

பொதுத் தேர்தலைச் சந்தித்து விட்டு, ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியாமல் போனதால் இன்று ஏழையாக இருக்கும் கட்சி தி.மு.க. என்பதைக் கழக வழக்கறிஞர்கள் மறந்து விடாமல், வழக்குச் செலவுக்கு கட்சித் தலைமையை எதிர்பார்க்காமல், வழக்குகளில் சிக்கியுள்ள தி.மு.க.வினருக்கு ஆதரவாக இலவசமாக வாதாடி இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்’
 
 
உடன் பிறப்பே கழகம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றது.நமக்கு அரசு மூலமாகவும் இந்த "அரசு"களின் மூலமாகவும் தொல்லை நேரலாம் இழிமொழிகள் ஏச்சு பேச்சுகள் வரலாம் கலங்கிடாதே கண்மணியே.துரோகமும் வஞ்சகமும் நமக்குப் புதிதல்லவே கிளம்பிற்று காண் வேங்கையர் கூட்டம் என வழக்குகளை எல்லாம் வழக்கொழிந்து போக செய்ய வா. நான் அழைத்தேன் என்றவுடன் அண்டா குண்டாவை அடகு வைத்தாவது நீ வந்து (விடு) விடாதே உடன் பிறப்பே!
 எத்தனயோ குத்துகளை தாங்கியது தான் இந்த கருணாநிதி இன் முதுகு,
எத்தனையோ புயல்களை பார்த்தது தான் இந்த கழகம்.
 
                                                                                                                                          -கலைஞர்.

No comments:

Post a Comment