சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள், தகவல் தொழில் நுட்பவியல் துறை விழா (க்ந்யூடெலா- 2013) 24 - 01 - 2013 அன்று நடைபெற்றது.
விழாவில் கணிப்பொறி பயன்பாடுகள், தகவல் தொழில் நுட்பவியல் துறைத் தலைவர் திரு எஸ். குண சே கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவினை கல்லூரியின் தலைவர் திருமதி. எஸ். ஜெயா லக்ஷ்மி தொடக்கிவைத்தார்.
கல்லூரியின் செயலர் திரு. ஆர். சுப்ரமணி விழாவிற்கு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினாற்களாக கோவை எஸ்.வீ.எஸ் கணினி அறிவியல் பயன்பாட்டு கல்லூரியின் இயக்குநர் டாக்டர் எஸ். கே. மஹெந்திரன் , விவேகாணாதரின் 150 வது ஜயந்தி விழவின் மாநில அமைப்பாளர் திரு. ஆனந்த ரகுநாதன் அவர்களும் நண்பன் திரைப்படத்தின் நடிகர் திரு .என். வெங்கட் சுந்தர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெருந்திரளாக மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர். ரமேஷ் குமார் மற்றும் துணை முதல்வர் திரு. மனோகரன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கணிப்பொறி அறிவியல் துறை தலைவர் திரு .ஜே. ஐயப்பன் நன்றி கூறினார்.