சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொபைல் மென்பொருள் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு 03- 09 - 12 அன்று நடைபெற்றது.
கருத்தரங்கில் கோவை வீச்கேன் மென்பொருள் நிறுவனத்தை .சேர்ந்த பொறியாளர் திரு மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மொபைல் மென்பொருள் உருவாக்கும் முறைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.
சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
துணை முதல்வர் வீ. மனோஹரன் அவர்கள் மொபைல் மென்பொருளை வெளியிட்ட போது எடுத்த படம் |
மாணவர்களுக்கு பயன்படக் கூடிய முறையில் ஒரு மொபைல் மென்பொருளை கல்லூரி சார்பில் கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை வெளியிட்டது.
விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர் வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள்.
No comments:
Post a Comment