Friday, 24 August 2012

சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

சுப்ரமண்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் மென்பொருள் சோதனைகள் மற்றும் அதன் வழிமுறைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கு    24 - 8 - 12  அன்று நடைபெற்றது.


 கருத்தரங்கில் டாக்டர் N.G.P   கலை மற்றும்  அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி தொழில்நுட்பவியல் துறைப் பேராசிரியர் திரு.ஆந்த்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மென்பொருள் சோதனைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.



 சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை  இந்த கருத்தரங்கை   ஏற்பாடு செய்திருந்தது.


 துறைத் தலைவர் குணசேகர் வரவேற்று பேசினார். விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.



 கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர்              வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள். துறை இணைப் பேராசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment