Wednesday, 17 August 2011

மத்திய அரசை மண்டியிட வைத்த மக்கள் சக்தி!

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அண்ணா ஹசாரேவை, யோகா குரு ராம்தேவ் மீது போலீஸை ஏவிவிட்டு அடக்கியதைப் போன்று நசுக்கிவிடலாம் என்று கருதிய மத்திய அரசு, நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் சக்தியை பார்த்து மிரண்டு, பணிந்து போய் தற்போது அவமானப்பட்டு நிற்கிறது.


ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவதில், ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு, அவர்களுடன் ஆலோசனை நடத்தியது மத்திய அரசு.

ஆனால் இந்த மசோதாவில் ஊழல் செய்யும் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க ஏதுவாக அவர்களையும், விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்று ஹசாரே குழுவினர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.

பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு விலக்கு அளித்து தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவையே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஆனால் இந்த மசோதா வலுவற்றது என்று கூறிய ஹசாரே, பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி (நேற்று) முதல் டெல்லியிலுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் ஹசாரேவின் கோரிக்கையையும், அவரது உண்ணாவிரத போராட்டத்தையும் தாம் விரும்பவில்லை என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை உணர்த்தியது. உண்ணாவிரதத்தின் மூலம் ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீறக்கூடாது என்றும் அவர் பேசியது, ஹசாரே விடயத்தில் அவரது மனவோட்டம் என்ன என்பதை பட்டவர்த்தனமாகஉணர்த்தியது.

அதே சமயம் ஹசாரேவின் உண்ணாவிரதம் நிச்சயம் நாடு முழுவதும் பற்றிக்கொள்ளும் என்ற அச்சமும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டது.எனவே அதனை தடுக்கவும்,கூடவே ஹசாரேவை கைது செய்து உள்ளே வைத்தால், அதனால் மக்களிடையே எழும் ஆதரவு அல்லது போராட்ட வீச்சு எந்த அளவுக்கு இருக்கும் என்று நாடி பிடித்து பார்க்கவும் திட்டமிட்டது.

இதனால் ஹசாரே ஏற்கமாட்டார் என்று தெரிந்தே,உண்ணாவிரத இடத்தை மாற்றுவது மற்றும் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை டெல்லி காவல்துறை விதித்தது.

எதிர்பார்த்தபடியே அந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார்.அத்துடன் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காதவகையில், 144 தடையுத்தரவு அமலில் இல்லாத ஹசாரே வீடு இருக்கும் கிழக்கு டெல்லியின் மயூரா விகாரில் புகுந்து, நேற்று காலை 7.30 மணிக்கே அவரை கைது செய்து அழைத்து சென்றது டெல்லி காவல்துறை.

இது ஹசாரே ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.அவர்கள் ஹசாரேவை ஏற்றி சென்ற வாகனம் முன்னர் அமர்ந்து மறியலில் ஈடுபட, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடங்களுக்கு மேலாகி படாதபாடு பட்டது போலீஸ்.



அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹசாரேவை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஹசாரே. 



சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா போன்ற ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையிலேயே, ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேவும் அடைக்கப்பட்ட தகவல் பரவியதும் நாடு முழுவதுமே ஹசாரே ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கி மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என ஆவேசம் காட்டத் தொடங்கினர்.

மக்களின் இந்த போராட்ட வீச்சை தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு ஒளிபரப்ப, நாடு முழுவதும் தங்களுக்கு எதிரான ஒருமித்த கருத்து உருவாவதை பார்த்து மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மிரண்டு போனது.

போதாதற்கு எதிர்கட்சிகளும் சமீப காலத்தில் இல்லாதவகையில், ஹசாரே கைதை கண்டித்து ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன.

நாடாளுமன்றம் நடப்பதால் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று ஹசாரே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி வியாக்கியானம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அவரது இந்த கருத்துக்கு பதிலடியாக,"ராகுல் காந்தி மட்டும் உத்தரபிரதேசத்தில் 144 தடையுத்தரவை மீறி இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநிலம் பாட்டா - பார்சால் கிராமங்களுக்கு சென்றாரே...?அவரது இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்ததே?" என்று கேட்டபோது, அவர்தான் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாரே என்று மழுப்பலான பதில் ஒன்றை கூறினார் சிதம்பரம். 


ஆனால் ராகுல் காந்தி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னரே கைதானார்.ஆனால் ஹசாரே விடயத்தில் நடந்து என்ன?

தடையுத்தரவு அமலில் இல்லாத கிழக்கு டெல்லியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே? என்று சுட்டிக்காட்டினர் ஹசாரே ஆதரவாளர்கள். 


இது ஒருபுறம் இருக்க, லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் இருக்கும்போது, அது தொடர்பாக போராட்டம் நடத்தலாமா? என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பினர். உடனடியாக இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி, மகளிர் மசோதாவும் நாடாளுமன்றத்தில்தான் உள்ளது.அது தொடர்பாக மட்டும் போராட்டம் நடத்தப்படுகிறதே? என்று கேட்டபோது, அதற்கு காங்கிரஸ் தரப்பில் பதில் இல்லை.

இந்நிலையில்தான் ஹசாரே கைது விவகாரம், தாங்கள் எதிர்பார்த்ததை விட மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியதை பார்த்து, மக்கள் சக்தி முன் மண்டியிட்டு, நேற்று இரவே ஹசாரேவை விடுதலை செய்வதாக அறிவித்தது காவல்துறை.

ஆனாலும் சிறையிலிருந்து வெளியேற ஹசாரே மறுத்து விட்டார்.உண்ணாவிரதம் இருக்க நிபந்தனையின்றி அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே சிறையிலிருந்து வெளியேறுவேன் என ஹசாரே உறுதியாக கூறிவிட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் அவர் சிறையிலேயே இருந்ததால், நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவாகவும், மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் எழுந்த மக்கள் எழுச்சி நீடிக்கிறது. 


இந்நிலையில் சட்ட மசோதாவை மைதானத்தில் பேசி தீர்மானிக்க முடியாது என்று வியாக்கனம் பேசும் காங்கிரஸார், இந்திய விடுதலை போராட்டமே மைதானத்திலும், தெரு முனைகளிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில்தான் தொடங்கியது என்பதை மறந்து போனதுதான் ஆச்சரியமான ஒன்று.

மடியில் கனம் இருப்பவர்களுக்குத்தானே பயம்; மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதே பயம்தானா?  

Sunday, 14 August 2011

GIAH @ SCAS -2011

Hon'ble Principal Inaugurating the Exhibition
A hardware expo named  "GIAH-2011" has been successfully conducted on 05-08-2011 at subramanya college of arts and science.
Hon'ble Administrative officer with EXPO team


(GIAH - gathering information about hardwares)  college final year students of computer science department took all the responsibilities to their shoulders to get the programme a grand success.
students in EXPO


They just wanted to do this programme for the first year students those who are not familiar  with computers.
Hon'ble Chairman Lighting the lamp


college chairman lighting the lamp to inaugurate the function Principal and administrative officer gives their address and advised the students make use of it.
Faculties &EXPO students of Dept of Computer science

The young and energetic second and final year students prepared charts & models about the recent  technologies of computer science explained to 1st year students  also they demonstrated how the system really works.

 
Student demonstrating about the CRT


Like this GIAH-2011 the society of the students can develop their leadership qualities and know their strengths and weakness.

Expo Notification












Saturday, 13 August 2011

Mobile Phone Operating System

Nowadays majority of the people are using mobile phone. If we ask to spell out few mobile phone manufactures, it wil be 

1. Nokia
2. Sony Ericsson
3. Samsung
4. iPhone
5. Motorola
6. Blackberry
7. Etc.

Even I ask them to spell out few mobile phone service providers, they are saying exactly…

1. Airtel
2. Vodafone
3. Aircel
4. BSNL
5. Idea
6. Etc.

But I ask about mobile phone operating systems. Most of the people are unable to tell even one operating system.

This should not happen to you. Here I have listed the popular mobile phone operating system. Have a look and be ready to tell if anyone asks you about mobile phone operating system.


1. Symbian

2. Android(Google)


3. iPhone OS 


4. Windows Mobile


5. RIM Blackberry

6. Palm OS (Garnet OS)


7. Mobile Linux

8. Etc.   

Monday, 8 August 2011

பேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர்

காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். "என்னடா கனகவேல் எப்படியிருக்க...' எனக் கேட்ட
 காமராஜர்.

"நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன்.
இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள
சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் அந்த இளைஞர்.

அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, "மே/பா காமராஜர்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று முகவரி
 எழுதப்பட்டிருந்தது.

"என் பேரை எதுக்கு எழுதினே...'

காமராஜரின் குரலில் கோபம் இருந்தது.

 "இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது.
அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் அந்த இளைஞர்.

உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து,
 " கனகவேலு... இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும்.
அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி
அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க
 வேண்டியது இல்லையே.

"இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா,
கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி.
அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது'
என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.
காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர்,
காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்.இதெல்லாம் அந்த காலம்...!

Thursday, 4 August 2011

Tamilnadu Govt Announced Rs.8900 Crore Budget

பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் :

* தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது


* ரூ. 8 ஆயிரத்து 900 கோடிக்கு பயன் தரும் திட்டங்கள்

* வரி சீரமைப்பின் மூலம் வருவாய் ரூ. 3,618 கோடி

* எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடியாக அதிகரிப்பு

* பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணி வழங்க ரூ. 4.6 கோடி

* 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500ம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை

* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்க ரூ. 912 கோடி

* 2012 ஆகஸ்டில் மின்‌வெட்டு அடியோடு ரத்தாகும்

* சென்னை புறநகர் காவல் ஆணையரகம், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

* போலீஸ் துறை மேம்பாட்டிற்கு ரூ. 51 கோடி ஒதுக்கீடு

* சிறைத்துறை மேம்பாடு மற்றும் கைதிகள் மறுவாழ்விற்கு ரூ. 147 கோடி

* ‌தீயணைப்புத் துறை மேம்பாட்டிற்கு ரூ. 170 கோடி

* கூட்டுறவுத் துறைக்கடனை முறையாக செலுத்துவோர்க்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ. 3 ஆயிரம் கோடி

* உணவு தான்ய சேமிப்பு கிடங்குகள் அமைக்க ரூ. 237 கோடி

* ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தற்கு ரூ. 400 கோடி

* காவிரி ஆற்றில் முத்தரசநல்லூர் அருகே தடுப்பணை

* திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவ கல்லூரிகள்

* சூரிய சக்தியால் இயங்கும் ஒரு லட்சம் தெருவிளக்குகள் அமைக்க ரூ. 248 கோடி

* இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 135 கோடி

* பசுந்தீவன வளர்ச்சிக்கு ரூ. 15 கோடி

* ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி

* போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி

* புதிதாக 10 தொழிற் பயிற்சி மையங்கள்

* பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ.750லிருந்து ரூ.1000மாக உயர்வு.


Friday, 29 July 2011

அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் !



 அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம்.

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில்
 73.76 பில்லியன் டாலர் உள்ளது.


ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான
ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின்
இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

  உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான
 எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது. கடந்த 2007-ம்
 ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே
 அதற்கு ஏறுமுகம் தான். 


அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது.
கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில்
விற்று ஏகப்பட்ட லாபம். ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில்
 ஆதிக்கம் செலுத்துகிறது. 


இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத்
 தொட்டுள்ளது.

ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட்.
அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.