Thursday 4 August 2011

Tamilnadu Govt Announced Rs.8900 Crore Budget

பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் :

* தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது


* ரூ. 8 ஆயிரத்து 900 கோடிக்கு பயன் தரும் திட்டங்கள்

* வரி சீரமைப்பின் மூலம் வருவாய் ரூ. 3,618 கோடி

* எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடியாக அதிகரிப்பு

* பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணி வழங்க ரூ. 4.6 கோடி

* 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500ம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை

* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்க ரூ. 912 கோடி

* 2012 ஆகஸ்டில் மின்‌வெட்டு அடியோடு ரத்தாகும்

* சென்னை புறநகர் காவல் ஆணையரகம், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

* போலீஸ் துறை மேம்பாட்டிற்கு ரூ. 51 கோடி ஒதுக்கீடு

* சிறைத்துறை மேம்பாடு மற்றும் கைதிகள் மறுவாழ்விற்கு ரூ. 147 கோடி

* ‌தீயணைப்புத் துறை மேம்பாட்டிற்கு ரூ. 170 கோடி

* கூட்டுறவுத் துறைக்கடனை முறையாக செலுத்துவோர்க்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ. 3 ஆயிரம் கோடி

* உணவு தான்ய சேமிப்பு கிடங்குகள் அமைக்க ரூ. 237 கோடி

* ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தற்கு ரூ. 400 கோடி

* காவிரி ஆற்றில் முத்தரசநல்லூர் அருகே தடுப்பணை

* திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவ கல்லூரிகள்

* சூரிய சக்தியால் இயங்கும் ஒரு லட்சம் தெருவிளக்குகள் அமைக்க ரூ. 248 கோடி

* இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 135 கோடி

* பசுந்தீவன வளர்ச்சிக்கு ரூ. 15 கோடி

* ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி

* போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி

* புதிதாக 10 தொழிற் பயிற்சி மையங்கள்

* பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ.750லிருந்து ரூ.1000மாக உயர்வு.


No comments:

Post a Comment