Friday, 9 December 2011

பிஎச்.டி.-க்கு வார விடுமுறை நாள்களில் படித்துப் பெற்ற முதுநிலை பட்டம் செல்லாது'

ஆராய்ச்சிப் படிப்புகளை (பிஎச்.டி.) மேற்கொள்ள வார விடுமுறை நாள்களில் படித்து பெற்ற முதுநிலைப் பட்டம் செல்லாது என்பதை பல்கலைக்கழகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்ற எம். முத்தமிழன் என்ற மாணவர், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. சேர விண்ணப்பிருந்தார். அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 
 இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வார விடுமுறை நாள்களில் படித்தவர்களை பிஎச்.டி. படிப்பில் சேர்க்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளது.  எனினும், இதுகுறித்து 2012-ல் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்னர் தெளிவான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. 
 இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களிடம் கேட்டு பெற்ற விவரங்கள்:  சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: பிஎச்.டி. மேற்கொள்ள வார விடுமுறை நாள்களில் படித்து பெற்ற பட்டம் செல்லாது.
 பல்கலைக்கழகத்தில் 2011-12 கல்வியாண்டில் வார விடுமுறையில் படித்த பட்டம் பெற்ற மாணவர்கள் யாரும் ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படவில்லை.  சென்னை அண்ணா பல்கலைக்கழகம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது 2,984 பேர் பிஎச்.டி. மேற்கொண்டு வருகின்றனர். 
இவர்களில் யாரும் முதுநிலை பட்டப் படிப்பை வார விடுமுறை நாள்களில் படித்தவர்கள் அல்ல.  கடந்த 2001-2010 வரை பல்கலைக்கழகத்தில் 1,793 பேர் ஆராய்ச்சி (பிஎச்.டி.) பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரும் முதுநிலை பட்டப் படிப்பு வார விடுமுறை நாள்களில் படித்து பெற்றவர்கள் அல்ல.

படிக்காமலே பெயருக்கு பின்னால் பல Ph.D சேர்த்துக்கொள்பவர்களை தடை செய்ய  இதுவரை ஏதும் சட்டம் இல்லை.

No comments:

Post a Comment