லோக் சத்தா - மக்கள் சக்தியின் தேசியத் தலைவர் டாக்டர்.ஜெயப்ரகாஷ் நாராயணன்(டாக்டர்.ஜே.பி):
மத்திய அரசின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வரவேற்பதுடன் இது நீண்ட நாட்களுக்கு முன்னரே நடைப்பெற்றிருக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மசோதா விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிப்பதுடன் பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் .

சில்லறை வர்த்தகம் துவக்கத்தில் பொருளாதாரத்தை விட வேகமாய் வளரும். புதிய வியாபாரங்கள் இந்த அன்னிய முதலீட்டுக்கு செல்லும், மரபுசார் சில்லறை வியாபாரிகளுக்கு தொடர்ந்து அவர்களின் பங்கு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டாக்டர்.ஜே.பி அவர்கள் முன்னொரு காலத்தில் வங்கிகள் கணினிமயமாக்கப்பட்ட போதும், இதனால் பெரும்பாலானோர் வேலை இழப்பார்கள் என்று ஒரு சாரார் எதிர்த்து வந்தார்கள் என்றும் அது பின்னர் பொய்யாக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
"தற்பொழுது ஒரு கிலோ அரிசிக்கு ரூ.18 மட்டுமே விவசாயி பெற, நுகர்வோர் அதே ஒரு கிலோவிற்கு ரூ.30-35 வரை கொடுக்கிறார்கள். அதே போன்று காய்கறிகள், பழங்களுக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலையில் 35% விலையே விவசாயி பெறுகிறார்.
பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் இடைத்தரகர்களை நீக்கி, பொருட்களின் மதிப்பை உயர்த்தி, வீணாகும் பொருட்களையும், உணவுப்பற்றாக்குறையையும் அகற்றி, பொருட்களுக்கு நிலையான விலையை உருவாக்கி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உதவும்."
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: விஜயகாந்த்
"அந்நிய நாட்டு முதலீடு நம்முடைய நாட்டில் கூடவே கூடாது என்று நான் கூறவில்லை. அந்நிய நாட்டு முதலீடு ஒன்று நம்முடைய நாட்டின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இங்கேயே உற்பத்தி செய்கிற பொருளை வாங்கி, இங்கேயே விலைக்கு விற்கும் வியாபாரம் தொன்று தொட்டு நாம் செய்து வருவதே தவிர, நமக்கு தெரியாதது அல்ல.
இரண்டவாது அந்நிய நாட்டு மூலதனம் நம்முடைய நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாக இருந்தால் வரவேற்கலாம். ஆனால் இதுவோ வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு பதிலாக, இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறிக்கின்ற ஒன்றாகும். ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் இந்த அந்நிய நாட்டு மூலதனம் தேவையற்றது மட்டுமல்ல, தீதானதும் கூட. ஏற்கனவே வர்த்தகம் என்ற பெயரால் வந்த கிழக்கிந்திய கம்பெனிதான் இந்தியாவை 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி சுரண்டியது. அதே வகையில் இன்றும் வரலாறு திரும்புகிறது என்று சொல்வதைப் போல மீண்டும் ஆதிக்க நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகளை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுப்பதை தே.மு.தி.க. சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்
உண்மையிலேயே இந்த மசோதா விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிப்பதுடன் பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும் எப்படி??
சில்லறைவணிகத்தில் கம்பனிகள் இறங்குவது விவசாயிகளுக்கு பெரும் வரமாக அமையும் என்பது உண்மை. இந்தியாவில் 50% காய்கறிகள் கடைகளை அணுகுமுன்னரே அழுகி வீணாகின்றன.
இந்திய வணிகர்களால் குளிர்சாதன வசதி, நியாயமான விலை போன்றவற்றை விவசாயிகளுக்கு தர இயலவில்லை. ஆனால் இந்த கம்பனிகள் சில்லறை வணிகத்தில் இறங்கினால் காண்டிராக்ட் விவசாயம், ஃபார்வெர்ட் டிரேடிங் போன்ற முறையில் விவசாயிகளுக்கு நல்ல விலையும்,குளிரூட்டப்பட்ட பாதுகாப்புமுறையால் விளைபொருள் பாதுகாப்பு போன்றவையும் கிடைக்கும். பால் உற்பத்தி,முட்டை உற்பத்தி போன்றவை இதனால் நல்ல லாபம் அடையும்.
தற்போதைய நிலையில் காய்கறி சந்தைக்கு வந்ததும் வணிகர்கள் வந்து ஏலம் பேசி பொருட்களை குறைந்த விலையில் வாங்குவது நடக்கிறது. ஆனால் இந்த கம்பனிகள் முன்கூட்டியே விலைநிர்னயம் செய்து என்ன தரத்தில் பொருள் வேண்டும் என நிர்ணயம் செய்வதால் விவசாயிக்கு பயிரிடுவதற்கு முன்பே தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது தெரியும். விளைபொருள் அழுகி வீணாவ்தும் நடவாது.
வாடிக்கையாளருக்கும் தரமான பொருள் குறைந்த விலையில் கிடைக்கும். எடைகுறைவு, அதிக விலை என்ற பேச்சே இல்லை.டீவி,டிவிடி முதல் காய்கறி வரை அனைத்துபொருளும் நல்ல தரத்துடனும் குறைவான விலையிலும் கிடைக்கும்.
சீனாவில் நுழைந்த வால்மார்ட் அமெரிக்காவுக்கு சீன பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய துவங்கியது. இன்று 10 பில்லியன் டாலர் அளவுக்கு வருடந்தோறும் சீனப்பொருட்களை அமெரிக்காவுக்கு வால்மார்ட் மட்டும் ஏற்றுமதி செய்கிறது. இதனால் வால்மார்ட்டின் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. சீன விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.
வால்மார்ர்ட்டால் அமெரிக்க சிறுவணிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் பல அமெரிக்க நகரங்களில் வால்மார்ட் தான் மிக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை தரும் கம்பனியாகவும் இருக்கிறது எனும் உண்மையையும் மறைக்க இயலாது. வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் அனைவரும் வெள்ளையர். வால்மார்ட்டால் வேலை பெறுவோரில் பெரும்பாலானோர் ஏழை கறுப்பினத்தவர் என்ற நிதர்சனமும் இருக்கிறது.
இந்தியாவில் வால்மார்ட்டால் இதுபோல் ஒரு மாற்றம் நிகழுமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. நமது அரசும் சிறுவணிகர்களை நினைத்து தயங்குவதும், விவசாயிகளை நினைத்து மயங்குவதுமாக இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
மற்ற வெளிநாட்டு கம்பனிகளும் இந்தியாவில் நுழைந்தால் பெருநகரங்களில் உள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் விவசாயத்துறை மறுமலர்ச்சி அடையும் எனும் உண்மையும் இருக்கிறது.
இப்போது அவர்கள் பெருவணிகர்களிடம் பொருளை வாங்கி மறுவிற்பனை செய்கின்றனர். இதன்பின் அவர்கள் அதை விட குறைந்த விலையில் பன்னாட்டு கம்பனிகளிடம் பொருட்களை வாங்கி மறுவிற்பனை செய்யலாம்.
எனவே தான் மத்திய அரசின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நாமும் வரவேற்கலாம்...

Dr. Vijaykanth |

No comments:
Post a Comment