Saturday 29 October 2011

சாதித்த மாணவர்கள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா' அண்மையில் நடத்திய பசுமை விமானம் தயாரிப்பு போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 3-வது இடத்தை வென்றுள்ளது. 

SRM University campus view


 சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், குறைந்த எரிபொருள், குறைந்த இரைச்சல் மற்றும் நச்சுப் புகையை மிகக் குறைந்த அளவில் கக்கும் வகையிலான "பசுமை' விமானங்களை உருவாக்க வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இதுதொடர்பான போட்டியை "நாசா' நடத்தி வருகிறது. 

 2011-ம் ஆண்டுக்கான போட்டி கடந்த மே மாதம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலிருந்து விமானப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் ஜி. மகேந்திர பெருமாள் தலைமையில் மாணவர்கள் அக்சய் கார்க், சுர்ய கிரண், அப்துல் சயீத் கான், பேட் ஸ்வீட்டி பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.  

இந்தக் குழு குறைந்த எரிபொருள், குறைந்த இரைச்சல், நச்சுப் புகையை குறைந்த அளவில் வெளியிடக்கூடிய மற்றும் 200 பேர் பயணிக்கக் கூடிய "செரா (எஸ்.ஆர்.எம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விமானம்)' என்ற விமான மாதிரியை உருவாக்கிப் போட்டியில் சமர்ப்பித்தது.  

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், சிறந்த சிந்தனை மற்றும் வடிவமைப்பை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

No comments:

Post a Comment