சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு 12- 07 - 13 அன்று நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்களூர் கூவேர்ட்ஸ் சொல்யூசன் ப்ரைவேட் லிமிட் மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் திரு .யோகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கும் முறைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.
சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள் துறை இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர் வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள்.