Sunday, 28 July 2013

சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு நடத்திய கண்காட்சி

 சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரியில்  25-07-2013 அன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் ஆண்டு மாணவர்களின் மென்பொருள்  வன்பொருள்  கண்காட்சி,  புதிய தொழில்நுட்பங்கள்  அதன் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.


www.scas.org.in






 மென்பொருள் &  வன்பொருள் பற்றிய  அடிப்படை அறிவினை பெற 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



 சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் இதுபோன்ற புதிய முயற்சிகளை வளர்ப்பதன் மூலம் இளைய தலைமுறை  அறிவியலும், அறிவும் வழுப்பெரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.



Friday, 19 July 2013

சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

சுப்ரமண்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு    12- 07 - 13  அன்று நடைபெற்றது.


கருத்தரங்கில் பங்களூர்  கூவேர்ட்ஸ் சொல்யூசன் ப்ரைவேட் லிமிட்   மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் திரு .யோகேஷ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கும் முறைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.


சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள்  துறை  இந்த கருத்தரங்கை   ஏற்பாடு செய்திருந்தது.


விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர் வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள்.

Thursday, 24 January 2013

சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை விழா

 சுப்ரமண்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில்   அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள், தகவல் தொழில் நுட்பவியல் துறை விழா (க்ந்‌யூடெலா- 2013) 24 - 01 - 2013  அன்று நடைபெற்றது.


விழாவில் கணிப்பொறி பயன்பாடுகள், தகவல் தொழில் நுட்பவியல் துறைத் தலைவர் திரு எஸ். குண சே கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவினை கல்லூரியின் தலைவர் திருமதி. எஸ். ஜெயா லக்ஷ்மி தொடக்கிவைத்தார்.

கல்லூரியின் செயலர் திரு. ஆர். சுப்ரமணி விழாவிற்கு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினாற்களாக கோவை எஸ்.வீ.எஸ் கணினி அறிவியல் பயன்பாட்டு கல்லூரியின் இயக்குநர் டாக்டர் எஸ். கே. மஹெந்திரன் , விவேகாணாதரின் 150 வது ஜயந்தி விழவின் மாநில அமைப்பாளர் திரு. ஆனந்த ரகுநாதன் அவர்களும் நண்பன் திரைப்படத்தின் நடிகர் திரு .என். வெங்கட் சுந்தர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



பெருந்திரளாக மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர். ரமேஷ் குமார் மற்றும் துணை முதல்வர் திரு. மனோகரன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கணிப்பொறி அறிவியல் துறை தலைவர் திரு .ஜே. ஐயப்பன் நன்றி கூறினார்.