Thursday 19 April 2012

இந்தியாவின் வெற்றிச்சாதனை! அக்னி-5 .


அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின்ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில்பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.

அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டுச் செல்லக்கூடியது.



தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.

ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.

அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.



அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க Indian Rupee symbol.svg25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

No comments:

Post a Comment