Saturday 21 January 2012

கணினி ஆராய்ச்சி பற்றி பாரதியார் பல்கலை.யில் பிப்.10-ல் கருத்தரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "கணினி ஆராய்ச்சி: ஏன், என்ன, எப்படி?‘ என்பது பற்றிய சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறுகிறது.  
 
இந்தக் கருத்தரங்கில் கணினியில் ஆராய்ச்சி செய்வது எப்படி? கணினியில் ஏன் ஆராய்ச்சி செய்யப்படுகிறது? என்னென்ன தலைப்புகளில் ஆராய்ச்சிகள் செய்யலாம்? ஆய்வுக் கட்டுரை எழுவது எப்படி? ஆதார நூற்பட்டியல் தயாரிப்பது எப்படி? ஆய்வறிக்கை தயாரிப்பது எப்படி? என்று விளக்கப்பட உள்ளது. 
 
 எம்.பில். மற்றும் பி.எச்டி. ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆண்டு நடைபெறும் கருத்தரங்கில் 750-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
கருத்தரங்கில் பெயரை பதிவு செய்து கொள்ள www.b-u.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனுப்பலாம். அல்லது budcaric@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.  மேலும் விவரங்களுக்கு, 9842012361, 9790004351 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment